Battery Charge - Triplet (45 நிமிடங்கள்) Rs. 12 / வாரம்
Idea 4 Sales (15 நிமிடங்கள்)
"Balsu sir" என்று மாணவர்களால் பிரியமாக, அழைக்கப்படும், திரு.Balasunder மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில், பிரபலமாக பேசப்படும் Balsu 's Succuess Academy -ன் உரிமையாளர். சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக, Coaching Industry -ல் உள்ளார். பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, இவர் ஆசிரியரையும் தாண்டி, Mentor-ரையும் கடந்து, சிறந்த நண்பராக இருந்து வருகிறார். இவரது Seminar-களை attend செய்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, லட்சத்தை தொடும். இவரிடம் பயின்றவர்கள், இன்று உலகம் முழுவதும், பரவி உள்ளனர். இதில் பெருமை படும் விஷயம், பலவருடங்களுக்கு முன்பு படித்தவர்கள் கூட, இன்றும் இவரோடு தொடர்பில் உள்ளனர். இவருடைய பிரத்தியேக வலை ஒலிதான் Balsu's Talk. இதில் இவரது அனுபவங்கள், இவர் படித்தது, இவர் பார்த்தது, இவர் பயின்றது, இவர் ஆச்சரியப்பட்டது... என எத்தனையோ விஷயங்களை, நம்முடன் பகிர இருக்கிறார். இந்த தொகுப்பில் அவர் சொல்ல இருக்கும் Idea 4 Sales என்பது, ஒரு கற்பனை கதையின் மூலம், இன்றைய உலகில் எது மிகவும் வலிமையானது, என்பதை பற்றியது .

தனி ஒருவன் (18 நிமிடங்கள்)
அன்பர்களே, நாம், நமது வாழ்வில், நிறைய நேரங்களை தனியாவே செலவிடுவோம். தொடர் தோல்விகள், யாரும் ஆதரவில்லாத நிலை, தனிமையின் கொடுமை. இப்படி எத்தனையோ? ஆனால் இந்த தனிமையை சரியாக பயன்படுத்தினால், அது நம்முடைய வாழ்க்கையில் பல கதவுகள் மூடியிருந்தாலும், சில ஜன்னல்களை திறக்கும். தனிமை நம்மை முடக்கி போட அல்ல. சுயமாய் சிந்திக்க கிடைத்த சுதந்திரம். தனிமை தனியாக தவிக்க அல்ல, தடங்கல் இன்றி செயலாற்ற கிடைத்த சிறகுகள். கேளுங்கள் உற்சாகம் பிறக்கும்.

பாத்துக்கலாம்..!! (12 நிமிடங்கள்)
நாம் அன்றாடம் பயன்படுத்துகிற வார்த்தைகளுக்கு புது விளக்கங்கள். நாம் செயல் வடிவம் கொடுக்கும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும், வாழ்க்கை பயணத்தில் பயன்படுத்தி, வெற்றியாக.... இல்லை... இல்லை.. மகிழ்ச்சியாக... அட அதுவும் இல்லை... அதை விட பெரியது. ஆம் நிம்மதியாக பயணிக்க, ஒரு காக்கா கதை மூலம், எளிமையாய் மற்றும் சுவையாய். கேளுங்கள். உள்ளத்தில் உற்சாகம் துளிர்க்க! என்னடா இது... என்ற நிலையிலிருந்து வெளியே வர, நமக்கு தெரிந்த ஒரு Magic. சொல்லப் போனால் நாம் அதில் expert.
