சான்றிதழ்கள்
நேயர்களின் ஊக்க பதிவுகள்

"This podcast is a hidden gem! கதைசொல்லல் ஆழமாக உள்ளது, மற்றும் விவரிப்பு என்னை ஆரம்பம் முதல் இறுதி வரை கவர்ந்திழுத்தது. ஒவ்வொரு அத்தியாயமும் நல்ல வேகம் மற்றும் ஈடுபாட்டுடன் உள்ளது. ஒலியின் தரம் கதை கேட்கும் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்குகிறது"
~ R. Balasunder, Madurai

Detective கதைகள், ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில், ஒரு திருப்பத்துடன் முடிவது, விறுவிறுப்பை தருகிறது. மேலும் பின்னணி இசை, கதை கேக்கும் போது, நம்மை கதையுடன் ஒன்றிட செய்கிறது. குறிப்பாக Operation Vizag கதையில், அதன் hero ஜெகன் train-ல் கிளம்பியவுடன், பின்னணியில் train சத்தம் வந்தது, என்னையும் கதையோடு இழுத்து சென்றது.
~ G. Jeyalakshmi, California, USA

I love the concept of your podcast. உதாரணமாக குழந்தைகள் பகுதியில், Lunch Break and Wisdom Stories. Time Pass கதைகளில் Stories @ Travel மற்றும் ஊக்கமது கைவிடேல். Good Night பகுதியில் நிறைய பக்தி சம்பந்தப்பட்ட கதைகளை எதிர்பார்க்கிறேன்.
~ N. Kamala, Madurai

மொத்தத்தில் கதைகள் நன்றாக உள்ளன. சில அத்தியாயங்கள் சற்று மெதுவாக உள்ளன. ஆனாலும், முயற்சியைப் பாராட்டுகிறேன், தொடர்ந்து கேட்கும் ஆசை உள்ளது.
~ S. Uma, Chennai

Kailash FM-ல் கதை கேட்டதில் ஒரு வானொலி கேட்கும் உணர்வை தந்தது. எனக்கு அந்த கால குழந்தை பருவ நாட்கள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக அத்தனை கதைகளும் அத்தனை வயதினரும் குடும்பத்துடன் ஒன்றாக கேட்கும் விதத்தில், ஆபாசம் மற்றும் வன்முறை இல்லாமல் அமைத்திருப்பது, அருமை.
~ K. Sivakami, Tenkasi

துப்பறியும் கதைகள் ஆங்கில நாவல்கள் படித்த உணர்வை தந்தது. குழந்தைகள் கதைகள் எனது குழந்தைகளை விட என்னை மிகவும் கவர்ந்துள்ளது. காரணம், கதை சொல்லப்பட்ட விதம். இவ்வளவு அருமையாக வேறு எங்கும் நான் குழந்தைகள் கதைகள் கேட்டதில்லை.
~ I. Madhan Raj, Madurai

எனது கண் அறுவை சிகிச்சையின் போது இந்த கதைகளை கேட்க ஆரம்பித்தேன். இப்போது தினமும் இரவு இதில் உள்ள கதைகளை கேட்க தவறுவதில்லை. மனநிறைவோடு தூங்க உதவுகிறது. நல்ல பணி. வாழ்த்துக்கள்!
~ S. Shyam, Chennai

Travel கதைகள், அந்த கால Pocket Novel கதைகளை கேட்கும் உணர்வை தந்தன. பயணத்தின் போது, வீணான வீடியோக்களை பார்த்து பொழுது போக்குவதற்கு பதிலாக, இது போன்ற நல்ல கதைகளை கேட்டு மகிழலாம்.
~ P. Padithurai, Madurai