Power ON - Triple Boost (61 நிமிடங்கள்) Rs. 12 / வாரம்
பூனைகளை மேய்ப்பது எப்படி? (21 நிமிடங்கள்)
பலரின் தினசரி பிரச்னையான நேரமின்மை, நேர விரயம், நேரத்தை நோக்கி ஒட்டம் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு விஷயம். நிபுணர்களின் வெற்றிக்கு உதவும் ஆலோசனைகள், உத்திகள், விதிகள் போன்றவற்றை அன்றாட வாழ்வின் உதாரணங்களுடன் நேயர்களுக்கு ரயில் பயணம் வாயிலாக சுவையாகவும், சுவாரசியமாகவும், எளிதாகவும் இந்த வலையொலியில் அன்புடன் அளிக்கிறோம்.
நேரத்தை தொலைத்து, நாள்தோறும் அதை எப்படியாவது சமாளித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், நேரத்தின் விலை மதிப்பற்ற தன்மையை உணர்ந்தவர்கள், நேரத்தை நேசிப்பவர்கள், எல்லாப் பணிகளிலும் மேலும் சிறந்து விளங்க முனையும் அன்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவு நம்பிக்கை துளிர்களைத் தூவிச் செல்லும் என்று நம்புகிறோம்.

Challenge (20 நிமிடங்கள்)
Change! பெரிய Challenge - ஆ
அது கசப்பானதா? இனிப்பானதா?
நம்மை சுற்றியுள்ள உலகமே மாறும்போது,
நாம் மாறாவிட்டால் எப்படி?
மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா!
ஒரு புறம் அறிவு! மறு புறம் சாமர்த்தியம்!
இதில் வெற்றி யாருக்கு?
வாழ்க்கை என்ற பள்ளியில் நாம், ஆசிரியரா? மாணவரா?
புதிய உலகம்! புதிய தேடல்! புதிய திருப்பம்!
இங்கு கற்பது யார்? கற்பிப்பது யார்?
மாற்றம்- இது யாருடைய கதை?
நம் எல்லோர் வாழ்க்கையின் புதுக்கதை!

மணி Value (26 நிமிடங்கள்)
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தவணை முறையில் தோல்விகள் வரும். செல்வ செழிப்பான வாழ்க்கையில், சம்பாதிக்க ஓடி கொண்டிருக்கும் நாம், விலை மதிப்பில்லா ஒன்றை செலவழிப்பதில் செய்யும் தவறுகள், ஒரு கட்டத்தில், நம்மை முட்டு சந்தில் கொண்டு போய் நிறுத்தும். ஆக மிகச் சரியாக செலவழித்தால், நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் மட்டும்மல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் அது பயனுள்ளதாக மாறும். சரி, இதை அப்புறம் கேட்கலாம் என்று நினைப்பவரா நீங்கள், அப்படி என்றால் உங்களுக்குத்தான் இந்த பதிவு. உடனே கேளுங்கள். ஏனென்றால், இது சாதாரண விஷயமல்ல. உங்கள் purse-ல் இல்லாத “மணி” Value.
