உயிலில் கலந்த உறவே (78 நிமிடங்கள்)
ஒரு பெண்ணின் ஆடம்பர மோகம்... இரு கொலைகளில் முடிகிறது. ஆனாலும் அவளது ஆசையை அவள் காதலனால், கடைசி வரை நிறைவேற்ற முடியவில்லை.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர். எத்தனை முறை சொன்னாலும், கொஞ்சம்தான குடிச்சுருக்கோம். ஒன்னும் பிரச்சனையில்லை. அதுனால வண்டிய ஓட்டுவோம். விளைவு ஒரு உயிர் பலி. அதோடு, பணம் இழப்பு மற்றும் நிம்மதி பறிபோனது.
அகல கால் வைத்தல்.... ஆரம்பத்தில் சந்தோஷத்தை அள்ளிக் கொடுத்தாலும், அது எப்போது அதல பாதாளத்தில் தள்ளிவிடும் என தெரியாது.
பிறந்தது முதல் தனிமை மற்றும் சோகம். அதனால் வாழ்க்கை முழுவதும் அப்படியேதான் இருக்க வேண்டுமா? அதிர்ஷ்டம், தந்தை வழியில் கதவை தட்டினால்..? அழியா செல்வம் கல்வி மட்டுமே. அது கைகொடுக்கும் போது, உணர முடியும்.
இத்தனை பின்னல்களுக்கு மத்தியில் Jack மற்றும் Jeni, தனது துப்பறியும் திறமையால், திரைக்கு பின்னே நடந்த சதியை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். ஒரு உயிரை வாங்கிய உயிலில், தொலைந்து போன உறவுகள் கலந்தன.
