சிலந்திக் கொலை - 50 நிமிடங்கள்
நகரில் அடுத்தடுத்து, திடீர் திடீரென மர்மமான முறையில், மரணங்கள் நிகழ்கின்றன. இறந்தர்வர்கள் இடையே எந்த வித தொடர்பும் இல்லை. ஆனால் இறந்தவர்களை இணைப்பது எது என தெரிய வரும் போது, ஒட்டு மொத்த துப்பறியும் இலாக்காவே அதிர்ச்சியில் உறைந்தது. மரணங்கள் இயற்கையானவை, என மருத்துவ சான்றிதழ் சொன்னாலும், அத்தனையும் மர்ம கொலைகள் என்பதை நிரூபிக்க துணிச்சலோடு, களம் இறங்கும் இரண்டு பெண்களின் உயிருக்கே ஆபத்து நெருங்குகிறது. அதிலிருந்து, அவர்கள் எப்படி தப்பித்தார்கள். குற்றவாளிகளை, எப்படி கையும் களவுமாக பிடித்தார்கள். பழரசத்துக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் என்ன? சூதாட்டத்தில் மறைந்திருக்கும், ரகசியம் தெரிய வரும்போது திக்... திக்...திக்...!
