ஆவணக் கொலை (70 நிமிடங்கள்)
ஜெகன். மத்திய அரசின் உளவு துறையின், தனி பிரிவாக இயங்கும் SCU… Special Crime Unit-ன் சிறப்பு அதிகாரி. அவரது ரகசிய துப்பறியும் கதை. மதுரையில், பத்திரப்பதிவு துறையில் ஒரு பெரிய scam நடக்கிறது. அது குறித்து விசாரிக்கப் போன SCU அதிகாரி என்ன ஆனார். அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா? அவர் கொடுத்த குறிப்புகள்…. காவல் துறையில் ஒரு கையாள். அது யார் என தெரிய வரும் போது, பெரிய அதிர்ச்சி. எந்தவித அரசியல் தலையீடு இல்லாமல் நடக்கும், இந்த குற்றத்திற்கு, பின்னணி யார். ஆவணங்கள்.... ஆபத்து... அது ஒரு கொலையில் தொடங்குகிறது. பலவித திகில் திருப்பங்களை கொண்டது, இந்த ஆவண கொலை.
