தெனாலினா.... சும்மாவா... (50 நிமிடங்கள்)
தெனாலிராமன், தமிழ் நகைச்சுவை உலகில், மிகவும் புகழ் பெற்றவர். இந்திய மொழிகளில் இவரைப் பற்றிய பாடக் குறிப்புகள் இல்லாத மொழியே கிடையாது என்னும் அளவுக்குப் பிரபலமானவர். விஜயநகரத்தை ஆண்ட, கிருஷ்ணதேவராயனின் அவையை அலங்கரித்த எட்டு அரசவைப் புலவர்களுள் ஒருவர். தெனாலிராமன் தன்னுடைய சாமர்த்தியம், அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால், அரசரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானார். அவரது கதைகள் கேட்க, கேட்க ஆனந்தம் அள்ளும். அவைகளை குழந்தைகள் எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையுடன், நல்ல குணங்களையும் வலியுறுத்தி ஒவ்வொரு கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
