மலரால் மலர்ந்த காதல் (27 நிமிடங்கள்) Rs. 9 / வாரம்
மொத்தம் மூன்று காதல்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரச்சனை. முதல் காதலுக்கு, காத்திருக்க முடியவில்லை. இரண்டாம் காதலுக்கு, இடியாப்ப சிக்கல். மூன்றாம் காதல், ஒரு தலை காதலில் இருந்து ஓய்ந்தபாடில்லை. இந்த மூன்றும், ஒரு நேர் கோட்டில் வரும்போது, மரணத்தின் விளிம்பு வரை சென்ற காதல், மந்திர ரோஜா மலரின் மாயத்தால் தப்பிக்கிறது. காதலை பிரிக்க பல போராட்டம் நடக்கிறது. அதே நேரம் காதலை சேர்க்க, சூழ்ச்சியும் செய்யப்படுகிறது. ஆம், பொது நலத்திலும் ஒரு சுயநலம். காட்டுக்குள் தப்பி ஓடிய காதல், கையும், களவுமாக பிடிபட்டு, வாள் முனையில், வாழ்வா சாவா என்ற நிலைக்கு வந்தது. காதலை சேர விடாத நாட்டு சட்டம், காதலை சேர்த்து வைக்கவும் உதவியது. ஆம் இங்கேயும், சட்டத்துக்குள் ஒரு ஓட்டை. கட்டம் கட்டபட்ட காதல், சட்டத்தின் ஓட்டை வழியா தப்பியது எப்படி.
