இராமாயண கதாபாத்திர சிறப்புகள் (30 நிமிடங்கள்)
இராமாயண இதிகாசத்தில், அதன் முக்கிய கதாபாத்திரங்களின் வீரமும், குணமும் வெகுவாக கொண்டாடப்படுகின்றன. ஆயினும் கூட அந்த பரந்த காப்பியத்தில், குறைவாக சொல்லப்பட்ட கதைகள், மற்றும் மறைக்கப்பட்ட கதாபாத்திரங்களின் அம்சங்கள், ஏராளமாக உள்ளன. இராமாயண இதிகாசத்தில், ராமனின் வீரம், சீதையின் பக்தி மற்றும் அனுமனின் விசுவாசத்திற்கு மிஞ்சிய, ஒரு பெண் கதாபாத்திரம் பாத்திரம் உள்ளது. அது போக ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் அறிவுசார் திறனும், மதிநுட்பமும் கவனிக்கப்படுவதில்லை. பல இடங்களில், அவர் அர்ப்பணிப்புள்ள ஒரு வேலைக்காரனாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார். இங்கே நாம் கேட்க இருப்பது, தெரிந்த கதாபாத்திரங்களின் அறியாத விஷயங்களையும், தெரியாத கதாபாத்திரங்களின் மகத்தான விஷயங்களையும்.
